புதுச்சேரி மின் துறை தனியார்மயம்: ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மின்துறை தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரியும், மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரி புதன்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரி புதன்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள்.

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவினை கண்டித்தும், உடனடியாக மின்துறை தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரியும், மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி மாநில அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவினை கைவிடக்கோரி மின்துறை ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது என கோரிக்கை மனு அளித்தனர். 

மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்று, அவர் உறுதி அளித்ததால் மின்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிகளை கவனித்து வந்தனர். 

இந்நிலையில், மின்துறை தனியார்மய நடவடிக்கையை துரிதப்படுத்தப்பட்டு உள்ளதால், புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் மத்திய, மாநில அரசின் கொள்கை முடிவினை கண்டித்தும், உடனடியாக தங்களது கொள்கை முடிவை கைவிடக்கோரி அனைத்து பொறியாளர் மற்றும் தொழிலாளர்களும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை காலை முதல் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் முதல் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் மண்டலம் 1 பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து பங்கேற்றுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டம் ஒருவார காலம் தொடரும் என்று மின்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென பற்றி எரிந்தது: சென்னையில் பரபரப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com