சார்ஜாவில் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் நடைபெறவிருக்கிறது.
சார்ஜாவில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
சார்ஜாவில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு


உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் (2023 ஆம்) ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் நடைபெறவிருக்கிறது.

மாநாடு பற்றிய அறிவிப்பை இந்த நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்டுள்ளது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சார்ஜாவில் உள்ள லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன.

மாநாட்டுக்காகக் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பலாம்.

ஆய்வுச் சுருக்கக் கட்டுரைகள் 200 சொற்களுக்கு மிகாமல், யூனிகோடு - லதா  எழுத்துருவில், கட்டுரையாளரின் விவரங்களுடன் இருக்க வேண்டும். ஆய்வுக் சுருக்கங்கள் அனைத்தும் 2022, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முழுக் கட்டுரையும் abstract2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 2023, மாரச் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை www.iatrinternational.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு சென்னை தி.நகரிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை 044-28340488 / 96770 37474 / 98422 81957 / 96000 07819 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com