குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தது: போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆபத்தான நிலையில் பாலத்தை கடந்த வருவதால், உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்  மாவட்டம், அய்யம்பேட்டை அருகே,  அய்யம்பேட்டை - கணபதி அக்ரகாரம்  இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் செல்ல கூடிய குடமுருட்டி ஆற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட  பழமையான பாலம்  உள்ளது. இந்த பாலத்தின் வழியே மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம், வீரமாங்குடி, ஈச்சங்குடி, மணலூர், இலுப்பக் கோரை, உள்ளிக்கடை, பெருமாள் கோவில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாலத்தின் வழியே இளங்கார்குடி, இலுப்பக் கோரை ஆகிய கிராமங்களுக்கு செல்லும் 2 அரசு பஸ்களும், 3 மினி பஸ்களும் இயங்கி வந்தன. அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த சாலையின் வழியே தான் சென்று வந்தன.

மேலும், அய்யம்பேட்டை, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பள்ளிக் கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் இந்த பாலத்தின் வழியே சென்று தான் மாணவ,மாணவிகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்து வந்தனர்.

கிராமப்புறத்தைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் இந்த பாலத்தின் வழியே தங்கள் விளை பொருள்களை நகரங்களுக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், இந்த பாலம் பழுதடைந்து போனதால் இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணிகளின் போது, பழைய பாலத்தின் சாலை உள்வாங்கி சரிந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆட்டோ, கார், வேன், பஸ் இருசக்கர வாகனம் உள்ட்பட எந்த வாகனமும் செல்ல முடியாமல் போனது. இந்த சாலையை பயன்படுத்தும் கிராமமக்கள் அய்யம்பேட்டைக்கு அவசரத் தேவைகளை கூட வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆபத்தான நிலையில் இந்த சாலையை கடந்து வருகின்றனர். எனவே, சாலையில் மணல் மூட்டைகளை அடுக்கி இந்த சாலையை சீரமைத்து தர வேண்டுமென தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com