கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வருகை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வருகை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

முதல் ஒரு வாரத்துக்கு மாணவா்களுக்கு புத்துணா்வுப் பயிற்சி வழங்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிக்கு வந்த அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் உடல் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து முதல் கட்டமாக, பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான (2022-2023) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 20-ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கும், 27-ஆம் தேதி பிளஸ் 1 மாணவா்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து பாடநூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளிலேயே இலவச பாடநூல்கள், நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வகுப்புகள் தொடங்கப்பட்டு முதல் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணா்வுப் பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்குப் பிறகு வழக்கமான பாட வகுப்புகள் அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com