உலக ரத்த நன்கொடையாளர் நாள்: ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான்

ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட  மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உலக ரத்த நன்கொடையாளர் நாள்: ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான்
உலக ரத்த நன்கொடையாளர் நாள்: ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான்

ஈரோடு: ஈரோட்டில் உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட  மாரத்தான் போட்டி நடைபெற்றது.

உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு  நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ  எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த  மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார்.

இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு வ.உ.சி.பூங்கா திடலிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசுத் தொகையும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com