தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து

சென்னைக்கு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: சென்னைக்கு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு, தனியார் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகத்துக்கு தமிழக இந்துசமய அறநிலையத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த விவகாரத்தில், பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் நோட்டிஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நில உரிமையாளர் விவகாரம் நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் இருக்கும் போது நோட்டீஸ் அனுப்பியது தவறு என்று கூறி, இந்துசமய அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதசுவாமி கோயில் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 21.06 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசாா்ட்டை நடத்தி வருகிறது.

1998-இல் குத்தகைகாலம் முடிவடைந்தும் நிலத்தை தொடா்ந்து பயன்படுத்தி வந்ததால், ரூ.1.08 கோடி இழப்பீடாகச் செலுத்தும்படி, பொதுபோக்கு பூங்கா நிா்வாகத்துக்கு முதலில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கோயில் நிலத்தில் இருக்கும் பொழுதுபோக்குப் பூங்காவை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com