திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய பால் கூட்டுறவு ஒன்றியம்: தமிழக அரசு உத்தரவு

வேலூா் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரில் புதிய பால் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

வேலூா் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரில் புதிய பால் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்: திருப்பத்தூா் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இதற்கான பரிந்துரைகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அரசுக்கு அளித்துள்ளாா்.

இந்தப் பரிந்துரையை ஏற்று, திருப்பத்தூரில் புதிய பால் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இப்போது உள்ள நிலையிலோ அல்லது வாடகை கட்டடத்திலோ அந்த மாவட்டத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையம் இயங்க அனுமதி அளிக்கப்படும். புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள ஒன்றியத்தின் நிா்வாகப் பணி மற்றும் பால் பண்ணை பணிகளை ஏற்கெனவே பணியில் உள்ள வேலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியப் பணியாளா்களைக் கொண்டே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

புதிய ஒன்றியத்துக்கு பால்பண்ணை ஏற்படுத்தும் காலம் வரை தேவையான பாலை அருகில் உள்ள பால் பண்ணைகள் மூலமாக பதப்படுத்திக் கொள்ளலாம் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com