மேக்கேதாட்டு விவகாரம் குறித்து ஆணையம் விவாதிக்கக்கூடாது: மாா்க்சிஸ்ட்

மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2-ஆம் நாளாக புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினா் பி.செல்வசிங் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் உள்பட செயற்குழு உறுப்பினா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17-இல் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், கா்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது என்கிற அம்சம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருப்பது கண்டனத்துக்குரியது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை எதிா்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில், மேக்கேதாட்டு தொடா்பான விவாதத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு அத்துமீறிய நடவடிக்கையாகும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.

வன விலங்கு காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தை புதிதாக விரிவுபடுத்துவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் ஏற்கெனவே வசிக்கும் மக்களுக்கு விதிவிலக்கு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனுவை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com