வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி: பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்ததாக சென்னையில் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்ததாக சென்னையில் பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் ,கும்பகோணத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், கொடுங்கையூா் ஆசிரியா் காலனியைச் சோ்ந்த ஏஞ்சல் (32) என்பவா் நடத்தி வரும் போலி நிறுவனம் மூலம் இளைஞா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்கிறாா். இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞா்களிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளாா். எனவே காவல்துறை ஏஞ்சல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், ஏஞ்சல், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஏஞ்சலை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் மோசடி குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com