ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்த தனியார் ஹோட்டல்

தனியார் ஹோட்டல் குழுமம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை

தனியார் ஹோட்டல் குழுமம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்கா, சொகுசு ஹோட்டல்கள் நடத்தி வரும் தனியார் குழுமத்திற்கு தொடர்புடைய சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வருமான வரித்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் ரூ. 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3 கோடி பணம், ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com