பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்!

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்!

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள அரியமங்கலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பழனிக்குமார், வழிவிட்டான், அழகு முருகன், முத்து முருகன் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்ட சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நேரில் சென்று ஆஜராகி கையெழுத்திட சென்று வந்தனர். 

கடந்த 2020 டிசம்பர் 10ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது பரமக்குடி  அருகே வந்தபோது பேருந்தை வழிமறித்து 10க்கும் மேற்பட்டோர் 4 பேரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் மதுரை மாவட்டம் சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் சபா என்ற சபாரத்தினம்(32) என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

மேலும் சபா என்ற சபாரத்தினம் மீது பல்வேறு வழக்குகள் மதுரை பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அந்தக் குற்றச் சம்பவங்களில் தனக்கு தொடர்பு இல்லை எனக்கூறி சபா என்ற சபாரத்தினம்,  திண்டுக்கல் 3ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ரங்கராஜ் முன்பு செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். தன் மீது பொய்யான வழக்குகளை மதுரை மற்றும் பரமக்குடி போலீசார் போட்டுள்ளதாகவும் தன்னை போலீசார் என்கவுண்டரில் கொலை செய்ய முயற்சி மேற்கொண்டு வருவதால் அதிலிருந்து தன்னை காப்பாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து உள்ளதாகவும் அந்த மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில் போலீசார் தன்னை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இல்லாமல் தேடி வருவதால் நீதிமன்றத்தில் ஆஜரானதாகத் தெரிவித்தார். இதையடுத்து சபா ரத்தினத்தை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சபாரத்தினம் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். சபா என்ற சபாரத்தினம் கடந்த 2013ம் ஆண்டு மதுரையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷ் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com