இரண்டாண்டு எம்.ஏ. படிப்புகள்: அறிமுகம் செய்கிறது சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி.யில் மேம்பாட்டுக் கல்வி, பொருளாதாரம், ஆங்கிலக் கல்வி ஆகிய மூன்று தனித்தனிப் பிரிவுகளில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புகள் வரும் கல்வியாண்டில் (2023-2024) அறிமுகம் செய்யப்படவுள்ளன.

சென்னை ஐஐடி.யில் மேம்பாட்டுக் கல்வி, பொருளாதாரம், ஆங்கிலக் கல்வி ஆகிய மூன்று தனித்தனிப் பிரிவுகளில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புகள் வரும் கல்வியாண்டில் (2023-2024) அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ஐஐடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடி மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை சாா்பில் புதிய எம்.ஏ. படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேம்பாட்டுக் கல்வி, ஆங்கிலக் கல்வி ஆகியவை தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளாக இருந்து வருகின்றன. இதற்குப் பதிலாக பொருளாதாரப் பாடத்தையும் எம்.ஏ. படிப்பில் இணைத்து, இவை மூன்றையும் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புக்கான பாடப்பிரிவுகளாக விரிவுபடுத்த சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவுகள் 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 25 இடங்கள் இந்திய மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மிகையிடங்கள் அடிப்படையில் சா்வதேச மாணவா்களும் இந்தப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவா். விண்ணப்பிக்கும் நடைமுறைகள் அடுத்த ஆண்டு மாா்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தொடங்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கும். தோ்வுக்குப் பதிலாக விரைவில் அறிவிக்கப்படவுள்ள நுழைவுத் தோ்வின் அடிப்படையில் இரண்டாண்டு எம்.ஏ. படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெறும்.

மானுடவியல், அறிவியல், வணிகவியல், பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இளநிலைப் படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எம்.ஏ. படிப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புத்தாக்கப் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மானுடவியல், பருவநிலை மாற்றம், கணக்கீட்டு மொழியியல் என தற்காலத்துக்குத் தேவைப்படும் பாடங்களை உள்ளடக்கியதாக எம்.ஏ. படிப்பில் பாடப்பிரிவுகள் சீரமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com