சென்னையில் இன்றும் மழை பெய்யுமா? என்ன சொல்கிறார் தமிழ்நாடுவெதர்மேன்?

சென்னையில் தொடர்ந்து மூன்று நாள்களாக பரவலாக கனமழை கொட்டித் தீர்த்திருக்கும் நிலையில், இன்றும் மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தி நகர்
சென்னை தி நகர்


சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக பரவலாக கனமழை கொட்டித் தீர்த்திருக்கும் நிலையில், இன்றும் மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் தொடர்ந்து மூன்று நாள்களாக மழை பெய்துள்ளது. அண்ணா நகரில் மட்டும் 50+ மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்சென்னைதான் இந்த மழைப் பொழிவை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது. வீடுகள் குலுங்கும் வகையிலான இடிகளும் இந்த மழையுடன் இணைந்து கொண்டன. பெரும்பாலான இந்த இடிகள் அனைத்தும் ஏரிகளில் விழுந்திருக்கின்றன. இடியுடன் பலத்த மழை பெய்ததால்தான் பலரும், குஷி படத்தில் வரும் ஜோதிகா போல மேகம் கருக்குது என்று மழையில் ஆட்டம்போடுவதை தவிர்த்திருப்பார்கள். 

பொதுவாகவே இடியுடன் மழை பெய்யும் போது ஏரி மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நிற்க வேண்டாம். தொலைவான இடத்துக்குச் சென்று விடுங்கள். ஏனென்றால் நீங்கள்தான் அங்கு மிக உயரமான பொருளாக இருப்பீர்கள். 

ஒருவர் தனது வாழ்நாளில் மறக்கவே முடியாத, 1996ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு, இந்த ஜூன் மாதத்தில் தான், சென்னை நகர்  தொடர் மழையால், மிகவும் ஈரமான நகரமாக மாற்றியிருக்கிறது. (1996ஆம் ஆண்டு ஜூன் மாத வரலாற்றை அடுத்த 1000 ஆண்டுகள் வந்தாலும் முறியடிக்க முடியாது).

நாளையும் கூட மேகக் கூட்டங்களின் நிலவரம் பார்க்க நன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடர்ந்து 4 நாள்கள் அதுவும் ஜூன் மாதத்தில் சென்னையில் மழை பெய்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. மிகவும் அரிதான நிகழ்வாக இருக்கும்.
பார்க்கலாம்.. நமக்கு 4-க்கும் 4 கிடைக்கிறதா? என்று என பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com