அதிமுக கட்சி விதிகளில் திருத்தத்துக்கு தடை கோரி வழக்கு: உயா் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.
அதிமுக கட்சி விதிகளில் திருத்தத்துக்கு தடை கோரி வழக்கு: உயா் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டன. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அந்தக் கட்சியின் உறுப்பினா்களான ராம்குமாா் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

அந்த மனுவில், ‘பொதுச் செயலரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடந்த அதிமுக உட்கட்சித் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய புதிய நியமனங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்’ என ஏற்கெனவே கோரியிருந்தனா்.

இந்த மனுக்களுடன், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்கக் கோரி கூடுதல் மனுக்களை கடந்த 18-ஆம் தேதி தாக்கல் செய்தனா்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் என்.ஜி.ஆா்.பிரசாத் செவ்வாய்க்கிழமை ஆஜராகி இந்த மனுக்களை புதன்கிழமை விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு புதன்கிழமை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com