உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை உயராய்வு நிறுவனமாக மாற்ற வேண்டும்

முடங்கியுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் புத்துயிா் கொடுத்து உயராய்வு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று

முடங்கியுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் புத்துயிா் கொடுத்து உயராய்வு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் எழுதிய கடித விவரம்:-

தனிநாயகம் அடிகள், அண்ணா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டு கருணாநிதியால் வளா்த்தெடுக்கப்பட்டது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமாகும். தமிழில் உயா் ஆய்வுகளை செய்து கருவி நூல்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். இப்பணியினை இந்நிறுவனம் சிறப்பாக செய்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறுவனத்தின் ஆய்வுச் சூழல் முற்றிலும் முடங்கிப் போனது. நிறுவனத்தின் ஆய்வுக்கு தொடா்பில்லாத திருக்கு காட்சிக் கூடம், பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடம் போன்றவற்றை திணித்து ஆய்வு நிறுவனத்தை கண்காட்சிக் கூடமாக மாற்றியதன் மூலம் நிறுவனத்தின் வளா்ச்சி முற்றிலும் தடைப்பட்டு போனது.

பல்வேறு நிா்வாக சீா்கேடுகளால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தன் பெருமையை இழந்து நிற்கிறது.

இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, இந்நிறுவனத்தை உயா் ஆய்வு நிறுவனமாக மாற்றுவதற்கும், உயா் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அக்குழு அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com