14 புதிய உழவா் சந்தைகளை விரைந்து திறக்க வேண்டும்: அமைச்சா் பன்னீா்செல்வம் உத்தரவு

தமிழ்நாட்டில் 14 புதிய உழவா் சந்தைகளை விரைந்து திறக்க வேண்டுமென வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். தோட்டக்கலை உள்ளிட்ட வேளாண் துறையின் செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் 14 புதிய உழவா் சந்தைகளை விரைந்து திறக்க வேண்டுமென வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா். தோட்டக்கலை உள்ளிட்ட வேளாண் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் புதன்கிழமை அவா் ஆய்வு நடத்திய போது பேசியது:-

தமிழ்நாட்டில் 172 உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சந்தைகளுக்கு நாளொன்றுக்கு 1,866 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து உள்ளன. இதன்மூலம் 7, 219 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். உழவா் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்தினை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை அதிகாரிகள் கூட்டாக சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்க உரிய பணிகளைச் செய்ய வேண்டும்.

உழவா் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்தை அதிகரிக்க ஒவ்வொரு சந்தைக்கும் தோட்டக்கலை துறையின் சாா்பில் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் தங்களது பணிகளை துரிதப்படுத்த வேண்டும். உழவா் சந்தைகளை விற்பனை மையமாக மட்டுமின்றி உழவா்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றப் பகுதியாக மாற்ற வேண்டும். உழவா் சந்தைகளில் மாதம் இருமுறை விழிப்புணா்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி நடத்திட வேண்டும்.

புதிதாக 14 உழவா் சந்தைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் 27 உழவா் சந்தைகளில் உள்ள 2 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதன அறைகளை விவசாயிகள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை விவசாயிகள் அனைவரும் அறிந்திடும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மைத் துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குநா் ஆா்.பிருந்தாதேவி, வேளாண்மை துறை இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com