ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் மற்றும் போலீசார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் மற்றும் போலீசார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியில் வசிக்கும் வாலிபர் கார்த்திக்(23). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வேட்டையாடப்பட்ட பன்றி இறைச்சி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .

பின்னர், கிருஷ்ணன்கோவில் போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து செம்பட்டையன்கால் பகுதியிலுள்ள கார்த்திக் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சமைத்து வேகவைக்கப்பட்ட பன்றி கறி இருந்தது. மேலும், வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 12 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வெடிகுண்டு தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர், வீட்டில் இருந்த கார்த்திக் (23) என்ற வாலிபரை போலீசாருடன் சேர்ந்து வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் வாலிபர் கார்த்திகை ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கார்த்திக் மீது ஏற்கனவே வன விலங்குகளை வேட்டையாடிதாக சில வழக்குகள் உள்ளதாக தெரிகிறது 

இந்நிலையில், அவரது வீட்டில்  வேகவைக்கப்பட்ட 1 கிலோ பன்றி இறைச்சி இருந்ததால் பன்றியை எங்கே வைத்து வேட்டையாடினர் என்பது குறித்து  வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் தகவல் கேள்விப்பட்டவுடன் விருதுநகரிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் விரைந்து வந்து பாதுகாப்பாக பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை பார்வையிட்டார். மேலும் போலீஸ் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

திருவில்லிபுத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் மற்றும் வனத்துறையினரால் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் செம்பட்டையன்கால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பாக வனத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com