முதல் டி20: இலங்கையை வென்றது இந்திய மகளிர் அணி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோட்ரிக்ஸ் (கோப்புப்படம்)
ரோட்ரிக்ஸ் (கோப்புப்படம்)


இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இருஅணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஸ்மிருதி மந்தனா (1), ஷப்பினேனி மேகனா (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்ததால், இந்திய அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. இதன்பிறகு, ஷெஃபாலி வர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கௌர் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். ஷெஃபாலி 31 ரன்களுக்கும், ஹர்மன்பீர்த் 22 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணி மீண்டும் சிக்கலில் திணறியது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் மட்டும் சற்று ஆறுதல் காட்டி இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரன்கள் சேர்த்தார். தீப்தி சர்மா கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோட்ரிக்ஸ் 36 ரன்களும், தீப்தி சர்மா 17 ரன்களும் எடுத்தனர். 

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி தொடர்ச்சியாக ரன்களை எடுத்து விளையாடினாலும், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை தொடமுடியவில்லை.

இதனால் விக்கெட்டுகள் இருந்தபோதிலும் வெற்றி இலக்கை அடைய முடியாமல் திணறிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகி விருதை ஜெமிமா ரோட்ரிக்ஸ் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com