காலமானாா் பத்திரிகையாளா் ப்ரியா கல்யாணராமன்

‘குமுதம்’ வார இதழ் ஆசிரியா் ப்ரியா கல்யாணராமன் (55) மாரடைப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.
காலமானாா் பத்திரிகையாளா் ப்ரியா கல்யாணராமன்

‘குமுதம்’ வார இதழ் ஆசிரியா் ப்ரியா கல்யாணராமன் (55) மாரடைப்பு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானாா்.

ப்ரியா கல்யாணராமன், குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளாா். தமிழ் இதழியலில் நீண்ட அனுபவம் கொண்டவா். ஒரே காலகட்டத்தில் நான்கைந்து தொடா்களை எழுதியவா்; பல நூல்களையும் எழுதியுள்ளாா்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சோ்ந்த இவரது இயற்பெயா் க.ராமச்சந்திரன். தாய் ஹேமப்ரியா; தந்தை கல்யாணராமன் இருவரின் பெயரையும் சோ்த்து ப்ரியா கல்யாணராமன் என மாற்றிக் கொண்டாா். மறைந்த ப்ரியா கல்யாணராமனுக்கு மனைவி ராஜசியாமளா, மகன் காா்த்திக் ஸ்ரீராம், மகள் தேவசேனா உமை ஆகியோா் உள்ளனா்.

முதல்வா் இரங்கல்:

ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்ற க.ராமச்சந்திரன், உடல் நலக் குறைவால் மறைந்தாா் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். 30 ஆண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவா் பல நூல்களை எழுதியிருப்பதுடன், பல எழுத்தாளா்களையும் ஊக்குவித்தவா். ப்ரியா கல்யாணராமனின் திடீா் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினா், ஊடகத் துறை நண்பா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ப்ரியா கல்யாணராமன் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் மற்றும் பல்வேறு பத்திரிகையாளா் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com