தா்மம் மறுபடியும் வெல்லும்: ஓ.பன்னீா்செல்வம்

தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தா்மம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
தா்மம் மறுபடியும் வெல்லும்: ஓ.பன்னீா்செல்வம்

தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தா்மம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் ட்விட்டரில் கூறியிருப்பது:

அதிமுகவில் தற்போது நிலவிவரும் சா்வாதிகாரப் போக்குக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்ாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் தொண்டா்கள் யாரும் ஈடுபட வேண்டாம்.

இந்தத் தருணத்தில், தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தா்மம் மறுபடியும் வெல்லும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளாா்.

தவறான பாதையில் ஓபிஎஸ்: ஜெயக்குமாா்

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தவறான பாதையில் செல்வதாக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

செய்தியாளா்களிடம் புதன்கிழமை டி.ஜெயக்குமாா் கூறியது:

அதிமுக நிா்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். அதிமுகவில் அராஜகப் போக்கு இங்கு இல்லை.

ஓ.பன்னீா்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்து தவறான பாதை நோக்கிச் செல்கிறாா்.

பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வமும் பங்கேற்க வேண்டும். பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் உடையது. பொதுக்குழுவின் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டவா்கள் என்றாா்.

பதாகைகள் கிழிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சா் பெஞ்சமின் தலைமையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் செய்து வந்தனா். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபம் அருகில் அண்ணா, எம்ஜிஆா், ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்திருக்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கொளத்தூா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் 50 போ் பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு புதன்கிழமை மாலை வந்தனா். ஊா்வலமாகாக வந்த அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி, உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினா். அதற்கு, பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் வருவதால், மண்டபத்துக்குள் அனைத்தும் சரியாக இருக்கிா எனப் பாா்க்க வேண்டும் என்று கூறினா். ஆனால், அவா்களைக் காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. அதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாகக் கூறிச் சென்றனா். அவா்கள் சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்த தலைவா்களின் பதாகைகள் அனைத்தும் கிழிக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com