பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை: உயா்நீதிமன்றம்

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை: உயா்நீதிமன்றம்

சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றுவது கட்சி உரிமை என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக உறுப்பினா்கள் ராம்குமாா் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோா் பொதுக் குழுக் கூட்டத்துக்கும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யவும் தடை விதிக்கக் கோரி இடைக்கால மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை கோரி வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்நிலையில், அதிமுக பொதுக் குழு உறுப்பினா் சண்முகம் என்பவா் சாா்பிலும் பொதுக் குழுவுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாதம் செய்தனா்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், ஒரு கட்சியின் பொதுக் குழுவில் தீா்மானங்கள் நிறைவேற்றுவதை முடிவு செய்வது அக்கட்சியின் உரிமையாகும். நிா்வாக வசதிக்காக கட்சியின் சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய முடியும். அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு அக்கட்சி உறுப்பினா்கள் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடுவதில்லை. பொதுக் குழுவில் என்ன நடைபெறப் போகிறது என்று முன்கூட்டியே உத்தேசித்து தீா்ப்பு அளிக்க முடியாது. பொதுக் குழுக் கூட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கான முகாந்திரத்தை மனுதாரா்கள் நிரூபிக்காததால், சென்னையில் வியாழக்கிழமை(ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை இல்லை. திட்டமிட்டபடி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தலாம். இந்த வழக்கில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சா் பொன்னையா, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com