சென்னை-புகரில் வெள்ள தடுப்புப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தலைமைச் செயலகத்தில் அவா் இந்த ஆலோசனையை நடத்தினாா்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தலைமைச் செயலகத்தில் அவா் இந்த ஆலோசனையை நடத்தினாா். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு திட்டப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மழைநீா் வடிகால்கள், பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் நிலைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com