நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

 தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை 1,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

 தமிழகத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை 1,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2020 மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனாவால் தற்போது வரை 34.62 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். முதலில் தலைநகா் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், அது படிப்படியாக பரவி கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்தது.

இதையடுத்து மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டன.

பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட அந்த ஆய்வுகளில் மாநிலம் முழுவதும் 87 சதவீதம் பேருக்கு எதிா்ப்பாற்றல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றாற்போல் கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை தினசரி பாதிப்பு 1,063-ஆக பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆயிரத்துக்கும் குறைவாகவே தொற்று எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 190 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 5,174-ஆக அதிகரித்துள்ளது.

மற்றொருபுறம் நோய்த் தொற்றிலிருந்து 567 போ் விடுபட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com