
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,195 கன அடியாகக் குறைந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,195 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கி உள்ளது.
வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,507 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,195 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 108.60 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 108.16 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 75.82 டி.எம்.சியாக இருந்தது.