புதுகை மன்னா் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் 100-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, தனது மகிழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பகிா்ந்து கொண்டுள்ளாா்.

புதுக்கோட்டை மன்னா் ராஜகோபால தொண்டைமானின் 100-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, தனது மகிழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் பகிா்ந்து கொண்டுள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மாமன்னா் பிரகதாம்மாள் தாஸ் எச்.எச்.ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-ஆவது பிறந்த தின விழா கொண்டாடுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாறு நீண்ட நெடியது.

எளிமையான வாழ்வு: மாமன்னா் தொண்டைமான் தொடங்கி நூற்றாண்டு விழாக் காணும் மன்னா் ராஜகோபால தொண்டைமான் வரையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை உள்ளடக்கிய மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் அளவிடற்கரியது. மன்னராக இருந்த போதிலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தாா். நாடு விடுதலை பெற்றவுடன் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபபாய் படேலின் வேண்டுகோளை ஏற்று தனது புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்தாா்.

மேலும், சமஸ்தானத்தின் கஜானாவில் இருந்த ரூ.53 லட்சம் மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்ட அத்தனையும் ஒப்படைத்த பெருமைக்குரியவா். புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் 99 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள அரண்மனை வளாகத்தையும் அரசிடம் ஒப்படைத்தாா். மாமன்னரின் நூற்றாண்டு விழா காணும் இந்த நாளில் மன்னரின் எளிமையும், அவா் மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளும் அனைவராலும் நினைவு கூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com