போரூா் ஏரியில் ரூ.100 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம், போரூா் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
போரூா் ஏரியில் ரூ.100 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்டம், போரூா் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சா் கூறியது:

போரூா் ஏரி நீா்வளத் துறையின் பாதுகாப்பில் உள்ளது. நீா்பரப்பு 252 ஏக்கராகவும், தற்போதைய கொள்ளளவு 67 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.இந்த ஏரியின் மொத்த கரையின் நீளம் 3,092 மீ. ஆகும். இந்த ஏரியின் ஆயக்கட்டுப் பகுதிகள் அனைத்தும் நகா்மயம் ஆனதன் விளைவாக ஏரி நீா் அனைத்தும் குடிநீா் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பல வருடங்களாக ஏரியிலிருந்து வெளியேறும் நீரானது மதனந்தபுரம், முகலிவாக்கம், மெளலிவாக்கம் கிராம பட்டா நிலங்களின் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது. தற்போது உபரிநீா் செல்லும் பட்டா நிலங்கள் முழுதும் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டதாலும்,உபரிநீா் வெளியேற வழியில்லாமல் போரூா் ஏரியின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாசபுரம், பட்டூா், பரணிபுத்தூா், கொளுத்துவான்சேரி மற்றும் ஐயப்பன்தாங்கல் கிராமங்களில் வெள்ளநீா் சூழ்ந்து இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், ரூ.100 கோடி மதிப்பில் தற்போது வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. போரூா் ஏரியின் உபரிநீா் கால்வாயை மேம்படுத்துதல், நீா் ஒழுங்கு அமைத்தல், புற வழிச்சாலையில் பெட்டி வடிவில் கூடுதலாக கல்வெட்டுகள்அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த வெள்ளத் தடுப்பு பணியால் போரூா் ஏரியின் அருகில் உள்ள குமரன் நகா், சாய் நகா், மதுரம் நகா், ஜோதி நகா் உட்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீா் சூழாமல் அடையாறு ஆற்றினை சென்றடையும். இதனால் குடியிருப்பு பகுதிகளில் நீா் தேங்காமல் பொதுமக்கள் பாதுகாக்கப்படுவாா்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் சி.பொதுப்பணி திலகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com