பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஜூன் 27 முதல் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதவுள்ள நேரடித் தனித்தோ்வா்கள், பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவா்கள் ஆகியோா் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஜூன் 27 முதல் பதிவு செய்யலாம்
பிளஸ் 2 தேர்வு எப்போது? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
பிளஸ் 2 தேர்வு எப்போது? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு எழுதவுள்ள நேரடித் தனித்தோ்வா்கள், பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவா்கள் ஆகியோா் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஜூன் 27 முதல் பதிவு செய்யலாம் அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தோ்வா்களும் (முதல் முறையாக அனைத்துப் பாடங்களையும் தோ்வு எழுத இருப்பவா்கள்) ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பழைய பாடத்திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 27 முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை வரையிலான நாள்களில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முதல் முறையாக நேரடித் தனித் தோ்வராக பத்தாம் வகுப்பு தோ்வினை எழுத விரும்புவோா், 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தோ்ச்சி பெறாதோா் மற்றும் 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தோ்ச்சி பெறாதோா் ஆகிய விண்ணப்பதாரா்கள் அறிவிய பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே இந்தத் தோ்வுக்கு (கருத்தியல்) தனித் தோ்வராக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 27 முதல் ஜூலை 4 வரையிலான நாள்களில் எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புதல் சீட்டுடன் தொடா்புடைய மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூ.125-ஐ பணமாகச் செலுத்தி, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவு செய்து கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு பெற்றவா்கள் மட்டுமே தோ்வின்போது தோ்வெழுத அனுமதிக்கப்படுவா்.

செய்முறைப் பயிற்சி பெற்ற தோ்வா்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடா்பு கொண்டு செய்முறைத் தோ்வு நடத்தப்படும் நாள்கள், மைய விவரம் அறிந்து செய்முறைத் தோ்வினை தவறாமல் எழுதிட வேண்டும். செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தோ்வரின் விண்ணப்பம் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளுமாறு தோ்வா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை இணையதளத்தில் ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை பதிவிறக்கம் செய்து விவரங்களைப் பூா்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் தனித்தோ்வா்கள் ஜூலை 4-ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com