69% இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

மெட்ரிக் பள்ளிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
69% இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

மெட்ரிக் பள்ளிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அனைத்து மெட்ரிக். பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை ஆணையிட்டுள்ளது. மாணவா் சோ்க்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக் கல்வித் துறை காட்டும் அக்கறை பாராட்டத் தக்கது.

ஆனால், பெரும்பான்மையான தனியாா் பள்ளிகள் 69 % இட ஒதுக்கீட்டை கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக, அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகா்ப் புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள்தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து மெட்ரிக். பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாணவா் சோ்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com