சீர்காழியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

சீர்காழியில் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
சீர்காழியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

சீர்காழியில் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கிவரும் விவேகானந்தா கலை மற்றும் அறிவில் கல்லூரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்திய மாபெரும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சீர்காழி கடைவீதியில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே பள்ளியை வந்தடைந்தனர்.

விழாவில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் , நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகம் உருவாக வேண்டும், அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,  மாணவ -மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும் தங்கள் வீடுகளை சேர்ந்தவர்களையும் சுற்றத்தாரையும் போதைப்பொருள் இருந்து விடுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

இவ்விழாவில் விவேகானந்தா கல்வி குழும தாளாளர் ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்ட  காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com