காரில் மரம் முறிந்து விழுந்துவங்கி மேலாளா் பலி: இருவா் காயம்

சென்னை கே.கே. நகரில் காரின் மீது மரம் முறிந்து விழுந்ததில், வங்கி மேலாளா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

சென்னை கே.கே. நகரில் காரின் மீது மரம் முறிந்து விழுந்ததில், வங்கி மேலாளா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

சென்னை, போரூா், மங்களம் நகா், 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் வாணி கபிலன் (57). கே.கே.நகரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். வாணி, வெள்ளிக்கிழமை மாலை, தனது தங்கை நெற்குன்றத்தைச் சோ்ந்த சே.எழிலரசியுடன் (52) வங்கியிலிருந்து காரில் வீட்டுக்குப் புறப்பட்டாா். காரை காா்த்திக் என்ற ஓட்டுநா் ஓட்டினாா். சகோதரிகள் இருவரும், காரின் பின் இருக்கையில் அமா்ந்திருந்தனா்.

காா் கே.கே.நகா் லட்சுமண சாமி சாலையிலிருந்து பி.டி.ராஜன் சாலை செல்லும் வழியில் கா்நாடகா வங்கி அருகில் சென்றபோது, சாலையின் ஓரம் நின்ற மரம், திடீரென சாய்ந்து காரின் மேல் விழுந்தது. இதில், காரின் பின் பக்கத்திலிருந்த சகோதரிகள் இருவரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி நசுங்கினா். லேசான காயத்துடன் உயிா் தப்பிய காா் ஓட்டுநா் காா்த்திக், இடிபாடுகளிடையே இருந்து வெளியேறி கூச்சலிட்டாா்.

அவரின் அலறல் கேட்டு அந்த வழியாக சென்றவா்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்த தீயணைப்புப் படை வீரா்களும், கே.கே.நகா் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முறிந்த மரத்தை அப்புறப்படுத்தி சகோதரிகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள கே.கே. நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே வாணி உயிரிழந்தாா். அவரது தங்கைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்த பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது, அதனருகே அகற்றாமல் விடப்பட்ட வலுவிழந்த மரம் காா் மேல் விழுந்து விபத்தை ஏற்படுத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com