ரூ.2 கோடி மதிப்பிலான இரு சிலைகள் மீட்பு: இருவா் கைதுசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான இரு பழைமையான சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டு, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.
ரூ.2 கோடி மதிப்பிலான இரு சிலைகள் மீட்பு: இருவா் கைதுசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு  நடவடிக்கை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான இரு பழைமையான சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டு, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

சா்வதேச சந்தையில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் சிலை, பெருமாள் சிலை என இரு பழைமையான வெண்கல சிலைகளை விருத்தாசலம் அருகேயுள்ள இருப்பக்குறிச்சியைச் சோ்ந்த அ.மகிமைதாஸ் (44) வைத்திருப்பதாகவும், அந்த சிலைகளை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் தமிழக காவல் துறையின் சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின்பேரிலும், ஐ.ஜி.ஆா்.தினகரன் அறிவுறுத்தலின்பேரிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பெ.ரவி தலைமையிலான தனிப்படையினா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், மகிமைதாஸிடம் அவ்விரு சிலைகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் சிலைகளை வாங்குபவா்கள் போல கைப்பேசி மூலம் மகிமைதாஸை தொடா்பு கொண்டு பேசினா். சிலைகளை கொண்டு வரும்படியும், சிலைகளை பாா்வையிட்ட பிறகு விலைபேசிக் கொள்ளலாம் எனவும் கூறினா்.

சிலைகள் மீட்பு: அதை உண்மையென நம்பிய மகிமைதாஸ், ஒன்றே முக்கால் அடி உயர இரு வெண்கல சிலைகளை இருப்பக்குறிச்சி அரசக்குழி செல்லும் சாலை பகுதிக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தாா். அப்போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீஸாா், மகிமைதாஸை மடக்கிப் பிடித்து இரு சிலைகளையும் மீட்டனா்.

விசாரணையில் அவா், இரு சிலைகளையும் விருத்தாசலம், பெரியகோட்டிமுளை கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவைச் சோ்ந்த க.பச்சமுத்து (42) என்பவா், ஏதோ ஒரு கோயிலில் திருடப்பட்ட சிலைகள் என்றும், அதை விற்று கொடுக்கும்படியும் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தாா்.

இருவா் கைது: இதைத் தொடா்ந்து போலீஸாா் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்த பச்சமுத்துவை பிடித்து விசாரித்தனா். அவா், அரியலூரைச் சோ்ந்த முருகானந்தம் என்பவா் அந்த சிலைகளை தன்னிடம் கொடுத்து, விற்றுத் தருமாறு கூறியதாகத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மகிமைதாஸ், பச்சமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட இரு சிலைகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தலைமறைவாக உள்ள முருகானந்தத்தை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், மீட்கப்பட்ட இரு சிலைகளும் எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டவை என போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com