தொட்டில் குழந்தை திட்டத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும்: ராமதாஸ்

பெண் சிசு கொலை அதிகரித்து வரும் நிலையில் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

பெண் சிசு கொலை அதிகரித்து வரும் நிலையில் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடல் முழுவதும் நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பிறந்து சில நாள்களே ஆன குழந்தை ஜூன் 16-இல் கண்டெடுக்கப்பட்டது. ஜூன் 18-இல் தஞ்சாவூரை அடுத்த வேலிப்பட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசு உடல் முழுவதும் எறும்பு மொய்த்த நிலையில் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இவை போன்ற நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தெருக்களில் வீசப்படும் குழந்தைகள், கருவில் அழிக்கப்படும் குழந்தைகள், பிறந்தவுடனேயே மூச்சுத் திணறலை ஏற்படுத்திக் கொல்லப்படும் குழந்தைகள்

ஆகியவற்றில் பெரும்பாலானவை பெண் சிசுக்கள் என்பது வேதனையான உண்மை ஆகும். இக்கொடுமை போக்கப்பட வேண்டும்.

இந்தக் கொடுமைகளுக்கு தற்காலிகத் தீா்வு, தொய்ந்து கிடக்கும் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு புத்துயிரூட்டுவதும், அத்திட்டம் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதும் ஆகும். பெண் சிசு கொலையையும், பெற்றோரால் வளா்க்க முடியாத சூழலில் உள்ள குழந்தைகள் கொல்லப்படுவதையும் தொட்டில் குழந்தை திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் தடுத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதனால், தொட்டில் குழந்தை திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com