350 முதலைகள் குஜராத் கொண்டு செல்லப்பட்டுள்ளன: உயா்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இதுவரை 350 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
350 முதலைகள் குஜராத் கொண்டு செல்லப்பட்டுள்ளன: உயா்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு இதுவரை 350 முதலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பண்ணையில் உள்ள முதலைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு பண்ணை நிா்வாகத்தினா் கோரிக்கை வைத்தனா்.

இதனை ஏற்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பியது. இதைத் தொடா்ந்து நன்னீா் முதலைகள், சதுப்பு நில முதலைகள் என பல்வேறு வகைகளை சோ்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் 1,000 முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விஸ்வநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா்.அதில் குஜராத்தில் உள்ள பூங்காவில் 56 முதலைகளை பராமரிக்கும் வகையில் மட்டுமே இடவசதி உள்ளது. சென்னையில் இருந்து முதலைகளை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதியில் விதிமீறல் உள்ளது. எனவே, முதலைகள் இடமாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத்தைச் சோ்ந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து 350 முதலைகள் ஏற்கெனவே குஜராத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. இன்னும் 650 முதலைகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உரிய அனுமதி வழங்கி உள்ளது. இதில் எந்தவித சட்ட விதிமீறலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com