
ராணிப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தபோது பணியில் இல்லாத அரசு ஆதரவற்ற குழந்தைகள் நல விடுதி கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் ரூ.118.40 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இதையும் படிக்க | ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்!
ராணிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வகுப்பறையில் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், ராணிப்பேட்டை காரை கூட்டுரோட்டில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் நல விடுதிக்கு சென்று திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில்லாத குழந்தைகள் நல விடுதி கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
விடுதி கண்காணிப்பாளர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தவிட்டார்.