காஞ்சிபுரம் சிவன் கோயில்களில் சிவராத்திரித் திருவிழா

காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சுவாமி வீதியுலாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் உடனுறை பர்வதவர்த்தினி அம்மன்..
சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் உடனுறை பர்வதவர்த்தினி அம்மன்..

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும்,சுவாமி வீதியுலாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏராளமான சிவன் கோயில்கள் உள்ளது. பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் கோயிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் அதன் துணைத்தலைவர் எம்.எஸ்.பூவேந்தன், செயலர் மு.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 4 கால  சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது.

நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில் கோயில் கலையரங்கில் 44வது ஆண்டாக மகாசிவராத்திரியை முன்னிட்டு குடந்தை எஸ்.லட்சுமண முதலியார் உட்பட பலரும் திருமுறை இன்னிசை என்ற தலைப்பில் பக்தி இன்னிசை நடத்தினார்கள்.

பெருமாள் ஆமை வடிவில் வந்து சிவனை வழிபட்ட பெருமைக்குரிய தலம் காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றறன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com