'என் வாழ்வின் பொன்னான நாள் இன்று': முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நீண்டநாள் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடக்கி வைத்த இந்தநாள் எனது வாழ்வின் பொன்னாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீண்டநாள் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடக்கி வைத்த இந்தநாள் எனது வாழ்வின் பொன்னாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்களாக மாணவகள், இளைஞர்களை மாற்றவே இந்த திட்டம் தமிழக அரசு சார்பில் தொடக்கங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நான் முதல்வன் என்ற தலைப்பில் இளைஞர்கள், மாணவர்கள் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். 

பின்னர் மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களுக்கு வேலை இருக்கிறது. ஆனால் அதற்கான தெளிந்த அறிவு இல்லை என்று கூறப்படுகிறது. அந்தக் குறையை போக்கவே நான் முதல்வன் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.

நமக்கு எங்கு வேலை கிடைக்கப்போகிறது என மனதிற்குள் இருக்கும் தடையை அகற்றும் நோக்கில் நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

3 பட்டம் பெற்றவர்கள் கூட நான்கு பேர் முன்பு பேச தயக்கம் காட்டுகின்றனர். வேலை என்பது சம்பளம் சாந்ததாக இருக்கக் கூடாது. திறமை சாந்ததாக இருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள படிப்பை தேர்வு செய்து அதில் திறமையுள்ளவர்களாக மாணவர்கள் மாற வேண்டும். விருப்பமுள்ள படிப்பை தேர்வு செய்வதுடன் அது குறித்து முழுத் தெளிவு பெற வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com