மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்ட 33 வார்டுகளின் உறுப்பினர்கள்.
மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்ட 33 வார்டுகளின் உறுப்பினர்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சென்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக 26, அதிமுக 4, அமுமுக 2, சுயேச்சை 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். 

வெற்றி பெற்ற நகர்மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா, புதன்கிழமை மன்னார்குடி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான கே.சென்னுகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 

இதனையொட்டி, கூட்ட அரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதலில் திமுக உறுப்பினர்களும், பின்னர், அமமுக உறுப்பினர்களும், இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் கூட்ட அரங்கிற்கு வந்து தங்களது வார்டுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். வார்டு எண் வரிசைப்படி பதவியேற்புக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர். 

முதலில் 1ஆவது வார்டு உறுப்பினர் கா.தமிழ்ச்செல்வி(திமுக) பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து 2-வது வார்டிலிருந்து மற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கடைசியாக 33-வது வார்டு உறுப்பினர் தி.திருச்செல்வி(அமமுக) பதவியேற்றார். பதவியேற்றத்தில் ஒருசில உறுப்பினர்கள் மட்டும் உளமாற என்றும், கடவுளறிய என்றும் பதவியேற்றனர். சில உறுப்பினர்கள் இரண்டையும் சேர்ந்து கூறி பதவியேற்றனர். 

பல உறுப்பினர்கள் உறுதிமொழியுடன் தங்கள் கட்சியின் தலைவர்களை குறிப்பிட்டும், தங்கள் குடும்பத்தின் மூத்தவர்களை குறிப்பிட்டும், வார்டு பொதுமக்களை குறிப்பிட்டும் பதவியேற்றுக் கொண்டனர். 33 உறுப்பினர்களும் முதல் முறையாக நகர்மன்ற உறுப்பினர்களாக ஆகியிருப்பாதல் பல உறுப்பினர்கள் உறுதிமொழியை படிக்கும் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து, புதிதாக பதவியேற்றுக் கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு விழாவினை காண கட்சியினரும், உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் பதவியேற்பினை பார்ப்பதற்காக வசதியாக நகராட்சி வளாகத்தில் துணிப்பந்தல் அமைத்து நாற்காலிகள் போடப்பட்டுருந்தது. தொலைக்காட்சி பெட்டிகளை வைத்து அதன் வாயிலாக பதிவேற்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் குணசேகரன், மேலாளர் ஜெ.மீராமன்சூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com