சங்ககிரி பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
சங்ககிரி பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி 18 வார்டுகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி பேரூராட்சி தேர்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான வ.சுலைமான் சேட் தலைமை வகித்து புதிதாக வெற்றி பெற்ற 1வது வார்டு உறுப்பினர் ஆர்.அருணா,  2வது வார்டு  பி.சத்யா, 3வது வார்டு  ச.கவிதா,  4வது வார்டு மு.மணிமொழி, 5வது வார்டு ச.ப. நிர்மலா, 6வது வார்டு  கோ.சுமங்கலா, 7வது வார்டு இரா.வ.அருண்பிரபு, 8வது வார்டு  செ.சின்னபொன்னு,  9வது வார்டு கி.சண்முகம், 10வது வார்டு சொ.கனகராஜ், 11வது வார்டு ச.பா.முருகேசன், 12வது வார்டு  க.கீதா, 13வது வார்டு  ஆ.மாணிக்கம், 14வது வார்டு  கு.கவிதா, 15வது வார்டு ரா.சந்திரா,  16வது வார்டு சு.வே.கௌசல்யாஸ்ரீ, 17வது வார்டு  வெ.கங்காதேவி, 18வது வார்டு  சி.குமார் ஆகியோர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

புதிதாக வெற்றி பெற்றவர்களுக்கு சின்னாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பி.தங்கமுத்து, திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், முன்னாள் பால்வளத்தலைவர் எம்.சின்னதம்பி, நகரச் செயலர் (பொ) சுப்ரமணியம், முன்னாள் நகரச் செயலர் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அத்தியண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் பி.செல்வராஜ், அரசு வழக்குரைஞர் ஆர்.அருள்பிரகாஷ், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com