நங்கவள்ளி பேரூராட்சியில் தேர்தல் ஒத்திவைப்பு

நங்கவள்ளி பேரூராட்சியில் தலைவர் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
நங்கவள்ளி பேரூராட்சியில் தேர்தல் ஒத்திவைப்பு

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சியில் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நங்கவள்ளி பேரூராட்சித் தலைவர் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் மூவரும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும் கடும் வாக்குவாதத்துடன் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனகிருஷ்ணன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தேர்தலை நடத்தக் கூறியும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையில் 150 போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதையடுத்து நங்கவள்ளி பேரூராட்சியில் தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக வேட்பாளர்கள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிய காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com