பண்ருட்டியில் திமுக போட்டி வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

பண்ருட்டி நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் திமுக போட்டி வேட்பாளர் கே.ராஜேந்திரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பண்ருட்டியில் திமுக போட்டி வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
பண்ருட்டியில் திமுக போட்டி வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


நெய்வேலி: பண்ருட்டி நகராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பில் திமுக போட்டி வேட்பாளர் கே.ராஜேந்திரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பண்ருட்டி நகராட்சி தலைவர் தேர்வுக்கான தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக 33 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமை சிவா முன்னிலைப்படுத்தி இருந்த நிலையில் இருபத்தி ஆறாவது வார்டு நகர மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளர்  கே ராஜேந்திரன் எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இருவரும் சரி சமமான நிலையில் முன்னேறி வந்த நிலையில் இறுதியில் திமுக போட்டி வேட்பாளர் கே ராஜேந்திரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து மற்றொரு முறையும் வாக்குச்சீட்டுகள் வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com