திருச்சி மேயராக திமுக மு.அன்பழகன் போட்டியின்றித் தேர்வு          

திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
திருச்சி மேயராக திமுக மு.அன்பழகன் போட்டியின்றித் தேர்வு          

திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணி 59 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், அமமுக ஓர் இடத்தையும், சுயேச்சைகள் 2 இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மட்டுமே வந்திருந்தனர். திமுகவைச் சேர்ந்த 27வது வார்டில் வெற்றி பெற்ற மு.அன்பழகன் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி ஏகமனதாக மேயராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து மேயர் இருக்கையில் அமரச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேயர் அன்பழகன், மறைந்த திமுக தலைவர்  கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டு உறுதி மொழியேற்றார். பின்னர், மாமன்றக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். மாநகராட்சிக்கு வெளியே திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் வெற்றியை கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com