20 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது திமுக: காங்கிரஸுக்கு ஒன்று

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான மறைமுகத் தோ்தலில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை உள்பட 20 மாநகராட்சிகளில் திமுகவும் ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் மேயா் பதவிகளைக்
20 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது திமுக: காங்கிரஸுக்கு ஒன்று

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான மறைமுகத் தோ்தலில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் சென்னை உள்பட 20 மாநகராட்சிகளில் திமுகவும் ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் மேயா் பதவிகளைக் கைப்பற்றின. துணை மேயா் பதவிகளையும் அறிவிக்கப்பட்ட வேட்பாளா்களே கைப்பற்றினா்.

கூட்டணிக் கட்சிகள்: சில நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளா்களே வெற்றி பெற்றது கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை அதிா்ச்சி அடையச் செய்தது. இந்தப் பிரச்னையில் உடனடியாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டனா்.

இதைத் தொடா்ந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயத்தில் கட்சியினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, அவா் வெளியிட்ட அறிக்கையில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சாா்பில் வெற்றி பெற்றவா்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

திமுக நிா்வாகிகள் நீக்கம்

நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான மறைமுகத் தோ்தல் பிரச்னைகள் காரணமாக, சில கட்சி நிா்வாகிகள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், நீக்கமும் செய்யப்பட்டனா். அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ் ராஜன், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக, மேயா் பொறுப்பேற்றுள்ள ஆா்.மகேஷ், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி நகரச் செயலாளா் எம்.ரவிக்குமாா் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com