என்னைக் கட்சியிலிருந்து நீக்க அவர்கள் யார்? ஓபிஎஸ் சகோதரர் ராஜா

தன்னைக் கட்சியிலிருந்து நீக்க ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் யார் என ஓ. ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
என்னைக் கட்சியிலிருந்து நீக்க அவர்கள் யார்? ஓபிஎஸ் சகோதரர் ராஜா


தன்னைக் கட்சியிலிருந்து நீக்க ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் யார் என ஓ. ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா வெள்ளிக்கிழமை நேரில் சென்று சந்தித்தார். இதையடுத்து, கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் ஓ. ராஜாக நீக்கப்படுவதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டனர்.

இதையொட்டி, தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. ராஜா கூறியதாவது:

"கட்சிக்குத் தற்போதைய சூழலில் சசிகலாவின் தலைமை தேவை. என்னைக் கட்சியிலிருந்து நீக்க அவர்கள் (ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி) யார்? கட்சியைத் தொடங்கிய எம்ஜிஆர் காலத்திலிருந்தே நான் கட்சியில் இருக்கிறேன். பின்னர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழும் செயல்பட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை சசிகலாதான் கட்சியின் பொதுச்செயலாளர். என்னைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லுபடியாகாது."

திருச்செந்தூரில் சசிகலாவுடன் என்ன பேசினீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கையில், "கட்சியை வழிநடத்துமாறு அவரைக் கேட்டுக்கொண்டேன்" என்றார் அவர்.

முன்னதாக, அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்கக்கூறி தேனியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து பேச்சு அதிமுகவில் பரவலாகத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com