Enable Javscript for better performance
ரூ.40 ஆயிரத்தைக் கடந்தது ஒரு சவரன் தங்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரூ.40 ஆயிரத்தைக் கடந்தது ஒரு சவரன் தங்கம்

    By DIN  |   Published On : 07th March 2022 09:57 AM  |   Last Updated : 07th March 2022 10:24 AM  |  அ+அ அ-  |  

    gold rate

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 1592 புள்ளிகளில் வீழ்ச்சியடைந்து 52.132 புள்ளிகளில் பங்குகள் விற்பனையாகி வருகிறது. வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக அதிகரித்தது வந்த தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.40 ஆயிரத்தைக் கடந்துள்ளது தங்கம் வாங்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

    இன்று திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 40,440-க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலமாக ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாதவகையில் ரூ. 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 85 உயர்ந்து ரூ. 5,055-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    ஒரு கிராம் வெள்ளி ரூ.1,80 அதிகரித்து ரூ. 75.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
     
    மார்ச் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.38,384 ஆகவும், 2 ஆம் தேதி ரூ.39,024 ஆகவும்,  3 ஆம் தேதி ரூ.38,912 ஆகவும், 4 ஆம் தேதி ரூ.38,984 ஆகவும், 5 ஆம் தேதி ரூ.39,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

    இதையும் படிக்க | கடும் ‌சரிவில் இந்திய பங்குச் சந்தைகள் 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp