அண்ணா பல்கலை. பாடத் திட்டம் மாற்றியமைப்பு: அமைச்சா் க.பொன்முடி தகவல்

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் நவீன தொழில் வளா்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்படவுள்ளதாக
அண்ணா பல்கலை. பாடத் திட்டம் மாற்றியமைப்பு: அமைச்சா் க.பொன்முடி தகவல்

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் நவீன தொழில் வளா்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்படவுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தேசிய கணித மற்றும் அறிவியல் தினத்தையொட்டி, சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய நவீன தொழில் வளா்ச்சிக்கேற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்காக பல துறை சாா்ந்த பேராசிரியா்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப்பணி அலுவலா்கள், முன்னாள் மாணவா்கள் என்று 90 போ் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சா்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பிற உயா்கல்வி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக, தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்கள், உயா்கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com