தமிழ்நாட்டில் கரோனா மரணம் இல்லாத நாள்

தமிழ்நாட்டில் இன்று கரோனா மரணம் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழ்நாட்டில் இன்று கரோனா மரணம் பதிவாகவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 150க்கும் கீழ் பதிவாகி வருகிறது. விரைவிலேயே இது பூஜ்ஜியத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி அதிக அளவாக கரோனாவால் 493 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் இதுவே அதிகபட்ச உயிரிழப்பாக இருந்தது. பின்னர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கரோனா இறப்பு குறைந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே கரோனா இறப்பு ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வந்தது. தற்போது கரோனா இறப்பு முழுமையாக குறைந்து இன்று பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளது. 

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 42,132 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 13 பேரும், செங்கல்பட்டில் 12 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 327 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 12,226-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,461 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவுக்கு இதுவரை 38,023 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com