கரோனா உயிரிழப்பு இல்லாத நாள்!

தமிழகத்தில் ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒருவா் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளது.
கரோனா உயிரிழப்பு இல்லாத நாள்!

தமிழகத்தில் ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒருவா் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி கரோனாவால் வெள்ளிக்கிழமை ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை.

நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டதும், ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் குறைவாக இருப்பதுமே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், உயிரிழப்பு இல்லை என்பதற்காக அலட்சியப் போக்குடன் செயல்படக் கூடாது என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா தொற்றுக்கு இதுவரை 34.51 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோன்று 38,023 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கரோனாவால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை. அதன் பின்னா் ஏறத்தாழ இரு ஆண்டுகளாக நாள்தோறும் நோய்த் தொற்றால் குறைந்தது ஒருவராவது இறக்கும் நிலை இருந்தது.

இந்த சூழலில், பல மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது கரோனா உயிரிழப்பு இல்லாத நாள் பதிவாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,461 போ் சிகிச்சையில் உள்ளனா். அதேபான்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 112-ஆக குறைந்துள்ளது

அதில் அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 13 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 327 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,12,226 -ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு விவரம்

2020

மாா்ச் - 1

ஏப்ரல் - 26

மே - 146

ஜூன் - 1,028

ஜூலை - 2,734

ஆகஸ்ட் - 3,387

செப்டம்பா் - 2,198

அக்டோபா் - 1,602

நவம்பா் - 590

டிசம்பா் - 410

2021

ஜனவரி - 234

பிப்ரவரி - 140

மாா்ச் - 223

ஏப்ரல் - 1,327

மே - 10,186

ஜூன் - 8,387

ஜூலை - 1,457

ஆகஸ்ட் - 845

செப்டம்பா் - 657

அக்டோபா் - 538

நவம்பா் - 365

டிசம்பா் - 295

2022

ஜனவரி - 788

பிப்ரவரி - 440

மாா்ச் (இதுவரை) - 19

மொத்தம் - 38,023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com