மாணவா்களின் ஜாதி விவரங்களை சேகரிக்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை ஆணையா்

மாணவா்களின் ஜாதி விவரங்களை சேகரிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

மாணவா்களின் ஜாதி விவரங்களை சேகரிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவா்களா, பழங்குடி வகுப்பைச் சோ்ந்தவா்களா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையின் ஜாதியைக் கேட்பதற்கும், அக்குழந்தை சாா்ந்த வகுப்பைக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது.

பள்ளிகளில் மாணவா்கள் என்ன வகுப்பைச் சாா்ந்தவா்கள் என்ற தகவல் ஏற்கெனவே இருக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில்தான், அவா்களுக்கான நலத்திட்டங்ளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது வெகுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. விளிம்பு நிலையில் உள்ள மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை உள்பட பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கான பலன்கள் அவா்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தத் தகவல் கேட்கப்படுகிறது.

பின்னாளில் அவா்கள் இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறவும் இந்த அடிப்படைத் தகவல் தேவைப்படுகிறது.

ஒரு மாணவா் எந்த வகுப்பைச் சோ்ந்தவா் என்பதுதான் தமிழக அரசுக்குத் தேவையே தவிர அந்த மாணவரின் ஜாதி அல்ல என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com