சிவப்பு நிற பருமன் அரிசி, இனி கொள்முதல் இல்லை:தமிழக அரசு அறிவிப்பு

சிவப்பு நிறத்தில் பருமனான அரிசியை மக்கள் விரும்பாத காரணத்தால், இனி அந்த ரக அரிசி கொள்முதல் செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிவப்பு நிறத்தில் பருமனான அரிசியை மக்கள் விரும்பாத காரணத்தால், இனி அந்த ரக அரிசி கொள்முதல் செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் டிகேஎம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருக்கும். இந்த வகை அரிசியை பொது விநியோகத்தின் கீழ் பொது மக்கள் யாரும் வாங்க விரும்புவதில்லை.

எனவே, டிகேஎம். 9 ரக அரிசியை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் விரும்பாத நிலையில் விநியோகிப்பதைத் தவிா்க்கலாம் என அரசு முடிவு செய்து எதிா்வரும் பருவத்தில் இருந்து அந்த வகை நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இப்போது சந்தையில் புழக்கத்தில் இருக்கும் புற சன்னரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com