மார்ச் 21-ல் புதிய புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் 

தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 21-ம் தேதி புயலாக உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 21-ம் தேதி புயலாக உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மார்ச் 19-ம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும். மேலும் மார்ச் 20-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்

மார்ச் 21-ல் மேலும் வலுப்பெற்று புயலாக உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com